Friday, 6 March 2009

ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

 

எங்கே செல்லும் இந்தப் பாதை ???

 

 

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் பெருமைப் படும் முஸ்லீம்களே !

 

ஒரு சினிமா தயாரிக்கப்படுவதற்கு முன் அதில் பங்கேற்கும் கலைஞர்களில் முழுமையாக கதையைக் கேட்கக் கூடியவர்கள் இசயமைப்பாளர்கள் தான் கதையைக் கேட்டு விட்டு சில நேரங்களில் பாடலாசிரியர் எழுதிக்கொடுத்தப் பாடல்களின் வரிகளைக் கூட மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தவர்கள் இசையமைப்பாளர்கள்.

 

பம்பாய் என்னும் திரைப்படக் கதையை கேட்காமல் இசையமைத்துக் கொடுத்து எனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்து விட்டேன் என்று பின் வாங்க முடியாது பம்பாய் கதையை முழுமையாகக் கேட்டு அதற்கொப்ப இயைசமைத்துக் கொடுத்தவர் தான் ரஹ்மான் எனும் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர்.

 

முஸ்லீம் சமுதாயத்தின் மீது அபாண்டமாக பழிசுமத்தி, பொய்யையும், மதவெறியையும் தூண்டி விட்ட பம்பாய் திரைப்படத்தைப் பார்த்த ஒவ்வொரு முஸ்லீமும் அதை எதிர்த்து நிருத்த முடியாமல் உள்ளத்தால் செத்து மடிந்தான்.

 

அவர் விருது வாங்கியதால் முஸ்லீம் சமுதாயத்திற்கு என்னப் பிரயோஜனம் ?

இன்னும் யாராவது பம்பாய் போன்ற அல்லது அதையும் விஞ்சும் அளவுக்கு படம் தயாரித்தால் அதற்கும் இவர் இசையமைத்துக் கொடுப்பார் !

 

இன உணர்வு கொள்வதை இஸ்லாம் வெறுப்பதால் அவரை முஸ்லீம் என்றுப் பாராமல் ஒரு இந்தியனுக்கு கிடைத்தது என்று (சினிமப் பிரியர்கள் முஸ்லீம்களிலும் இருப்பதால்) பெருமைப பட்டுக் கொண்டால் நாம் இதை எழுதப் போவதில்லை.

 

இவரைப் போன்றவர்களை ஆதரிப்பவர்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் முன்கூட்டியே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.

 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.….  ஆதார நூல்: புகாரி 5590

 

அவருடைய ஃபீல்டில் அவர் திறமையாக செயல்பட்டார் இளம் வயதில் இரவு பகலாக உழைத்து விருதுபெற்றார். அது அவருக்குப்பெருமை அவருடைய ஃபீல்டைச் சேர்ந்தவர்களுக்குப் பெருமை.

 

நமக்குப் பெருமையா ?

 

நாம் அந்த ஃபீல்டை வெறுக்கக் கூடியவர்கள் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் சிந்தனையை சிதறடிக்கக் கூடிய இசையை வெறுத்திருக்கின்றார்கள்.

 

உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (அறிவிப்பாளர்: யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)

 

அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றதா ?  இல்லையா ?

 

சினிமா என்றத் தீமையில் முன்னிலை வகிப்பது இசை தான். மூன்று மணி நேரம் ஓடக்கூடிய சினிமாவை முயற்சித்தால் சில நிமிடங்களில் மறந்து விடமுடியும்.

 

ஆனால் சினிமாவில் மூன்று நிமிடம் ஓடக் கூடியப் பாடலை பலவருடங்களானாலும் மறக்க முடிவதில்லை.

 

பாடலில் வரக்கூடிய ஆபாச வரிகளைக் கூட வெட்க உணர்வில்லாமல் ரோடுகளில் பாடிக் கொண்டுத் திரிவார்கள்,

 

வீடுகளில் உறவினர்கள் முன்னிலையில் உட்கார்ந்துக் கொண்டு வெட்க உணர்வில்லாமல் ஆபாச விரிகள் அடங்கியப் பாடல்களைப் பாடுவார்கள்.

 

அதையும் கடந்து கழிப்பறைகளில் மெய்மறந்துப் பாடுவார்கள். அதனால் தான்  ( மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. என்றுப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் )

 

வீடு, ரோடு, கக்கூஸ் என்று கண்ட இடங்களிலும், கண்ட நேரங்களிலும் இமேஜைப் பற்றி அறவே சிந்திக்காமல் வாய்விட்டுப் பாடுவதற்கு மூளையை ஆக்ரமித்து சிந்தனைத் திறனை செயலிழக்கச் செய்வதில் திரைப்பட இசைக்குப் பெரும் பங்கு உண்டு.  

 

ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சீரழிக்கக் கூடிய சினிமாவில் இசை பெரும் பங்கு வகிப்பதால் நம்மால் அதை எதிர்க்க முடியவில்லை என்றாலும் மௌணமாக இருந்து விடலாம் அதை விட்டு தீமைக்குப் துணைப் போகலாமா ? (ஆதரிக்கலாமா) .

 

ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்'. அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).  முஸ்லீம்

 

 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

 

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

 

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்