Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Wednesday, 3 September 2008

புகைப்பதனால் யாது பயன்?

சிகைமேற் கத்தியை நகைப்பது போலவே
புகைக்கா தென்போனை பகைக்கத் துணிவ - திகைக்கா(து)
தயக்கமேன் தாவி வர! உணர்; அதனால்
பயக்குமா ஏதும் பயன்?

சிகைமேல் வாள்வைத்து நகைப்பது போலவே
புகைக்காதே என்போனைப் பகைத்தல் — தகுமோ?
தீங்கறிந்து கூறுவோன் தீதிலன்; அவனைப்
பாங்குடன் கேளாய் பயன்.


தன்னுயிர் காக்கத் தடுப்போனைப் பகைத்தல்
தன்னையே தீயில் தள்ளல் — அறிவிலார்
தீங்கினை நாடித் திரிவதன் முன்னமே
தீவினை தன்னைத் தொடரும்.

- அப்துர் ரஹ்மான்