Wednesday 3 September, 2008

புகைப்பதனால் யாது பயன்?

சிகைமேற் கத்தியை நகைப்பது போலவே
புகைக்கா தென்போனை பகைக்கத் துணிவ - திகைக்கா(து)
தயக்கமேன் தாவி வர! உணர்; அதனால்
பயக்குமா ஏதும் பயன்?
- அப்துர் ரஹ்மான்

3 comments:

Anonymous said...

புகைக்காதிருக்க நினைக்கிறேன் - இயலாததால்
விரக்தியில் மீண்டும் புகைக்கிறேன். மண்டையோட்டு சின்னமும், சண்டை போடும் சொந்தமும் மீண்டும் மீண்டும் பயமுறுத்தும், ஆனால் நிகோடின் வேண்டி நெஞ்சமும் பரபரக்கும். இறுதியில் வென்றவர் யார் என்று ஐந்து நிமிடம் முன்பு அணைத்துப்போட்ட சிகரேட்டிடமே கேள்.

இருந்தாலும் நண்பா மீண்டும் முயற்சிப்பேன் புதிய முறையில். அதுபற்றி தீவிரமாய் யோசிக்க இப்போது ஒன்றே ஒன்று.

சும்மா விளையாட்டுக்காக நண்பன்.

ச. அன்வர்.

அப்துர் ரஹ்மான் said...

சண்டையிடும் சொந்தத்தை
அண்டையிலும் கொண்டவனே
மண்டையோடு சின்னத்தை
கண்டபின்னு மேன்மயக்கம்
மண்டையோடு அதனுள்ளே
மண்கொண்டாய் வேறென்ன
முண்டமென் றுணர்ந்தபின்னே
முக்காடு அதற்கேனோ?

வெந்தயத்தை யறிந்தபின்னும்
வீணில்ஏன் உன்மத்தம்
பந்தயத்தை கெடுவதற்கா
பயன்படுத்தி யறிவிழப்பர்?
சிறுஉரையை சீர்தூக்கி
சொன்னேனே; அல்லாஹ்வும்தன்
திருமறையில் கூறுகின்றான்
வீண்விரயம் வேண்டாமென!

--- அப்துர் ரஹ்மான்

Anonymous said...

மண்கொண்ட மண்டயென்றறிந்தபின்னும், எழுத்துக்களால் பண் திறந்த "மடை"யா?
குட்டி,குட்டியெழுத்துகொட்டி, கெட்டியாயொரு சிந்தனையை, சட்டி நிரப்பி தந்த(து) வெட்டி யா?
பாக்களில் தெளிவோமேனில் குறள் கண்ட தமிழ் நாட்டில் மாமனிதர் மட்டுமிருப்பர். இல்லாத ஏக்கம் எனக்குமுண்டு. முயற்சி திருவினையாக்கும், முயல்கிறேன் ஆளை விடு.

அன்புடன் நண்பன்,

ச. அன்வர்.